டிசம்பர் 12 - இது 28 வருட பழக்கமல்ல , பண்டிகை ! || நான் கொண்டாடும் தலைவர் பிறந்த நாள்
டிசம்பர் 12 - இது 28 வருட பழக்கமல்ல , பண்டிகை ! இன்னைக்கு சமூக வலைதள காலத்துல உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் வாழ்த்தவோ வாழ்த்து பெறவோ சுலபமா முடியும். ஆனா 28 வருடங்களுக்கு முன்னாடி பிறந்த நாளோட உச்சக்கட்ட குதூகலமே புத்தாடை போட்டுட்டு பள்ளிக்கு போய் நண்பர்கள் வாழ்த்து பாடல் பாட எல்லோருக்கும் பெருமிதத்தோட இனிப்பு வழங்கறது தான். ஒரு நாள் விடுமுறையான ஞாயிற்றுகிழமைல மட்டும் பிறந்த நாள் வந்துடவே கூடாது, இந்த மகிழ்ச்சிய அனுபவிக்க முடியாதுன்னு வேண்டிக்கிற சூழல்ல ஒரு மாதமே விடுமுறையா இருக்கற மே மாதம் தான் எனது பிறந்த நாள். வருடா வருடம் அப்பா என் பிறந்த நாளை விமரிசையாவே கொண்டாடுவார். புத்தாடை, கேக், இனிப்பு, பிடித்த சமையல், பிறந்த நாள் திரை பாடல்கள்ன்னு எல்லாமே இருக்கும். அப்பா காவல்துறை அதிகாரி, அதனால நிறைய காவலர்கள் விழாக்கு வருவாங்க. ஆனா கோடைக்கால விடுமுறை என்பதால் நண்பர்கள் ஊர்ல இருக்க மாட்டாங்க, இருக்கும் சிலருக்கும் பரிசு வாங்க முடியாது, ஏன்னா அன்னைக்கு வணிகர் தினம் என்பதால் எல்லா கடைகளும் விடுமுறைல இருக்கும். ஒருத்தர் பிறந்த நாளை கூட மறக்காம வாழ்த்து சொல்லும் எனக்கு நண்பர்களோட பள்ளியில...