அப்பாவுடன் கூட்டு சதியும் பாபா முதல் நாள் முதல் காட்சியும்
பாபா திரைப்படம் வெளியான 2002 ஆம் ஆண்டு கல்லூரியின் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்தேன். எங்களது கல்லூரியில் அத்தியாவசிய பொருட்களுக்காக ஒரு கேன்டீன் தொடங்கி இருந்தார்கள். அதன் பொறுப்பாளாராக எனது தோழி இருந்தார். இடைவேளைகளில் மேற்பார்வைக்காக அவர் செல்லும்போது உடன் நானும் செல்வேன். பொருட்களை எடுத்துக் கொடுப்பதற்காக ஒரு சிறுவனை நியமித்து இருந்தார்கள். பாபா படத்தின் பாடல் கேஸட் வெளியாகி இருந்த சமயம். எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று தோழியிடம் சொல்லிக் கொண்டிருக்க அந்த சிறுவனோ “ அக்கா.. நான் ரசிகர் மன்றத்துல இருக்கேன். நான் வேணா வாங்கி தரவா” என்று கேட்க வியப்பில் ஆழ்ந்தேன். விலை ஐம்பது ரூபாய் என சொல்ல சந்தேகம் தட்டினாலும் முயற்சித்து பார்க்கலாம் என தோன்ற பணத்தை கொடுத்தேன். மறு நாளே கேஸட்டுடன் கூடவே பாபா முத்திரை கொண்ட ஒரு செயினும் தந்து “மன்றத்துல குடுத்தாங்கக்கா “ என்று சொல்ல சந்தோஷக் கடலில் மூழ்கினேன். “டேய் .. கலக்குற டா “ என்று சொல்ல , “இது என்னக்கா ... முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் வேணுமா “ என்று கேட்க இதயம் பட படத்தது. “டேய்..கெடைக்குமா “ என்று கேட்க “கண்டிப்பா வாங்கி தரேன் கா ....