Posts

Showing posts with the label Taj Mahal

கற்பனை தாஜ் மஹால்.

 படித்ததில் பிடித்தது. இது ஒரு கற்பனை கதையே. இருப்பினும் நம் நெஞ்சை சற்று உலுக்கும் கதை. இதை ஏதோ ஒரு சிறிய புத்தகத்தில் படித்த நினைவு. அன்றைய தினம் தன் காதல் மனைவி மும்தாஜை பறிகொடுத்துவிட்டு ஷாஜஹான் உயிர் இருந்தும் நடைப்பிணமாக அலைமோதிக்கொண்டிருந்தார். மும்தாஜுக்காக ஒரு நினைவு மாளிகை கட்ட முடிவெடுத்து அதற்கான சிறந்த மாதிரியை தயார் செய்துக்கொடுக்கும்படி ஆஸ்தான கட்டிடக் கலைஞர் மற்றும் இன்னும் பல விற்பன்னர்களுக்கு செய்தி அனுப்பியிருந்தார். அனால் அவர்கள் சமர்ப்பித்த ஒரு மாதிரி கூட அவர் மனதிற்கு நிறைவாக இல்லை.  அன்றைய தினம் ஆஸ்தான கட்டிட கலைஞர் ஒரு மாதிரி எடுத்து வருவதாக கூறியிருந்தார். அவருக்காகதான் அன்னம் தண்ணி உண்ணாமல் காத்துக்கிடந்தார் ஷாஜஹான். கலைஞரும் வந்தார்.  “வணக்கம் சுல்தான்.” “வாருங்கள் விற்பன்னரே! ஏன் இவ்வளவு தாமதம்? எவ்வளவு நேரம் நான் காத்துக்கொண்டிருப்பது?” “சுல்தான் அவர்களே, நான் வருவதாக சொன்ன நேரத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்திருக்கிறேன்.” “ஓ! பதட்டத்தில் நான் கவனிக்கவில்லை. மாதிரி தயாரா? விரைந்துக்காட்டுங்கள்!” “மூன்று மாதிரிகள் தயார் செய்திருக்கிறேன் சுல்தான். உங்களுக