தலைவரும் ஆட்டோவும் || Chennai diaries
சின்ன வயசுல இருந்தே எனக்கு தலைவரை ரொம்ப பிடிக்கும். அதேப்போல தான் ஆட்டோவும். எனக்காக எங்க அப்பா ஒரு ஆட்டோவ வரவைச்சு காசு குடுத்து எங்க தெருவுல ரவுண்டு அடிக்க வைப்பாருன்னு அம்மா சொல்வாங்க. வளர்ந்த பிறகும் ஆட்டோ மீதான பற்று அப்படியே தான் இருந்துது. வெளியூர் பயணம் கூட ஆட்டோல போனா என்னன்னு கூட பல முறை யோசிச்சிருக்கேன். சென்னைக்கு வந்ததும் டூ வீலர் கேட்டேன். ஆனா ரெண்டு விஷயத்துக்காக எங்க வீட்ல வாங்கி தரல. ஒன்னு சென்னையின் ஹெவி டிராபிக். இன்னொன்னு சுள்ளுன்னு எனக்கு வர கோபம். ரெண்டுமே ஆபத்தா தெரியவே டூ வீலர் கனவு டிராப் ஆய்டுச்சு. சென்னையில என்னோட முதல் பஸ் பயணம் படு மோசம். பஸ் ரோமியோக்கள் பற்றி கேள்வி ஞானம் மட்டுமே அப்போ இருந்துது. அனுபவ பாடம் இல்ல. அதுனால தான் ஒரு ரோமியோ என்னை இடிக்க முயற்சி செய்றத உணரவே ரொம்ப நேரம் ஆச்சு. அவ்ளோ தான். அத்தோட பஸ் பயணத்துக்கு முழுக்கு போட்டுட்டேன். அன்று முதல் ஆட்டோ பயணம் தான். சென்னை வந்து பல வருஷம் ஆச்சு. என் சொத்துல பாதிய ஆட்டோவுக்கு தான் செலவு செஞ்சிருபேன். அவ்ளோ பயணங்கள். அதுல சுவாரசியமான பயணங்கள் இருந்துது. நெகிழ்வான பயணங்கள் இருந்துது. சண்டை சச்சரவு நி...