Kallakurichi deaths due to Illicit liquor

இன்று ஜூன் 26 - போதை ஒழிப்பு தினம். சமீபத்தில் தமிழகத்தையே புரட்டிப் போட்டிருக்கும் செய்தி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். இதைப்பற்றி பலவித கருத்துகள் எழுவதை காண முடிகிறது. எனக்கு தோன்றுவதை பகிர நினைக்கிறன். முதலில் ஒரு அதிர்ச்சியான உண்மையை பலர் உணர வேண்டும். போதை ஒழிப்பு தினம் மற்றும் போதை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகளால் மட்டும் போதை பழக்கத்தை ஒழித்து விட முடியாது. இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டுமென்றால் அதை ஒழிக்கவே முடியாது. மது அருந்துபவர்கள் அவர்களாகவே நினைத்தால் மட்டுமே ஒழிக்க இயலும். ஆனால் அது நடவாது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்பொழுதும் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஒழிப்போம் என்று கட்சிகள் வாக்குறுதி கொடுப்பதும் வாடிக்கை. நானும் அதுதான் நாட்டிற்கு நல்லது என்று நினைத்தேன். ஒரு முறை எனது தந்தை சில புகைப்படங்களை கொண்டு வந்திருந்தார். அதில் நிறைய பேரல்களும் அதோடு எனது தந்தை மற்றும் சில காவலர்கள் இருப்பதையும் கண்டு நான் குழம்பினேன். அதெல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பேரல்கள் என்றும் ஒரு கள்ளச்...