மனிதம் போற்று | A glimpse
Image source: Pinterest “சிவகாமி அக்கா.. கொஞ்சம் கொத்தமல்லி இருந்தா குடுங்க” என்ற குரல் கேட்டு சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தார் சிவகாமி. “வா கமலா” என்று சொல்லியவாறெ வெளியே வந்தவரின் கையில் முட்டையை பார்த்ததும் திடுக்கிட்ட கமலா “நீங்க சனிக்கிழமை முட்டை சாப்பிட மாட்டீங்களே?” என்றார். கமலாவை பார்த்து புன்னைகைத்து விட்டு “இன்னைக்கு சரவணனோட சிநேகிதன் வீட்டுக்கு வரான், சரவணன் அவன கூப்பிட போயிருக்கான், அவனுக்காக முட்டை பொரியல் செய்யலாம்ன்னு யோசிச்சேன்” என்றார் சிவகாமி. “அப்படியா..ஆச்சரியமா இருக்கே … சரவணன எனக்கு ரொம்ப நாளா தெரியும். சினேகிதன்னு அவன் யாரையும் கூட்டிட்டு வந்ததே இல்லையே?” “எனக்கும் அது தான் ஆச்சரியம். ஏதோ ப்ரொஜக்ட் விஷயமா ஒரு மாசமா பக்கத்துல இருக்கற நூலகத்துக்கு போய்ட்டு வரான். அங்க தான் சந்திச்சானாம். இவனுக்கு பாட சம்மந்தமா நிறைய உதவி பண்ணிருக்கான். அதான் சரவணனுக்கு புடிச்சுப்போச்சு.” “சரிக்கா..கொஞ்சம் கொத்தமல்லி இருந்தா குடுங்கக்கா” என்றார் கமலா. “இதோ தரேன்” என்று திரும்பிய சிவகாமியை “அம்மா, இவன் தான் என் ஃப்ரென்ட் ராஜா”” என்ற சரவணின் குரல் நிறுத்தவே புன்னகயுடன் ...